நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் – சரத்குமார், I am like that in real life too

சென்னை
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடித்த ‘டியூட்’ திரைப்படம், கடந்த 17-ந்தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் இதுவரை ரூ.95 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியிருக்கிறது. படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர்.
இந்த விழாவில் சரத்குமார் பங்கேற்று பேசும்போது, “தினமும் எனக்கு போன் செய்து அப்பாவாக, தாத்தாவாக நடிக்கிறீர்களா? என்று கேட்பார்கள். நான் முடியாது என்று கூறிவிடுவேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் கேட்கமாட்டேன். ஆனால் கதையின் ஒரு நாயகனாக இருக்கவேண்டும் என்று விருப்பப்படுவேன். ‘காஞ்சனா’ படத்தில் நடித்தபிறகு, சின்ன பசங்க என்னை ‘காஞ்சனா அங்கிள்’ என்று அழைத்தார்கள். இப்போது என்னை ‘டியூட்’ என்று அழைக்கிறார்கள்.
அடுத்த படத்தில் கூட தீபிகா படுகோனேவைக் கதாநாயகியாக போட்டு என்னை ‘டான்ஸ்’ ஆட சொன்னாலும் நான் ரெடி. ஏனெனில் ஐஸ்வர்யா ராய் கூடவே ஜோடியாக நடித்துவிட்டேன். எனவே யாரும் பொறாமைப்பட வேண்டாம். என்னை பார்த்து ‘பூக்கி மேன்’ என்கிறார்கள். ‘டியூட்’ படத்தில் பார்க்கும்படிதான் நிஜ வாழ்க்கையிலும் ஜாலியான ஆள்தான் நான். என் உடலை பார்த்து கோபக்காரன் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை”, என்றார்.