மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா?

ஸ்ரீதேவி
இந்திய சினிமாவில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் என்றால் அது நடிகை ஸ்ரீதேவி தான்.
அவர் இப்போது நம்முடன் இல்லை என்றாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
முன்னணி நாயகியாக இருந்த போதே ஹிந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என 2 மகள்கள் உள்ளனர்.
ஜான்வி ஏற்கெனவே சினிமாவில் அறிமுகமாகி நாயகியாக நடிக்கிறார், தென்னிந்திய பக்கமும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.
தங்கை
நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தில் அவரது தங்கை ஸ்ரீலதாவும் நாயகியாக விரும்பியுள்ளார், ஆனால் அவரால் ஜெயிக்க முடியவில்லை.
இதனால் அவர் ஸ்ரீதேவியின் மேனேஜராக செயல்பட்டார். 1972 முதல் 1993 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ தேவியின் நிழலாகவே இருந்து வந்தார் ஸ்ரீ லதா.
ஆனால் அவர்களது தாயாரின் இறப்பிற்கு பிறகு இருவரும் பண பிரச்சனையில் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதோ நடிகை ஸ்ரீதேவி தங்கையின் போட்டோ,