Dude படம் கலாச்சார சீரழிவு என விமர்சனம்.. இயக்குனர் கொடுத்த பதிலடி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன Dude படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் நல்ல வசூலையும் குவித்து வருகிறது.
5 நாட்களில் கிட்டத்தட்ட 95 கோடி வசூலித்து இருக்கும் நிலையில் இன்று 100 கோடி வசூலை கடந்திருக்கிறது. அதன் மூலமாக பிரதீப் ரங்கநாதனின் தொடர் வெற்றி இந்த படத்திலும் continue ஆகி இருக்கிறது.
மறுபுறம் இந்த படத்தின் கதை ஒரு கலாச்சார சீரழிவு என இணையத்தில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
விமர்சனத்திற்கு பதிலடி
இன்று Dude படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழா மேடையில் பேசிய இயக்குனர் கீர்த்திஸ்வரன் “படத்தின் கிளைமாக்சில் ஒரு வசனம் வரும், திருநெல்வேலி கவின் கொலைக்கு பிறகு தான் சேர்த்தோம்.அதை செய்ய சொன்னது பிரதீப் ரங்கநாதன் தான்” என தெரிவித்து இருக்கிறார்.
“இந்த படம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் (பெரியார்) இருந்தார். அவங்க நிறைய சொல்லி இருக்காங்க. அவங்க வழியில் தான் நாங்க எல்லாம் பேசிட்டு இருக்கோம்” என கீர்த்தீஸ்வரன் கூறி இருக்கிறார்.