மலையாள சினிமாவில் பலர் என்னை ஒதுக்கினர்

மலையாள சினிமாவில் பலர் என்னை ஒதுக்கினர்


சென்னை,

2015 ஆம் ஆண்டு பிரேமம் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசினார்.

அவர் கூறுகையில், ‘பிரேமம் படத்திற்குப் பிறகு, டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கத் தயங்கினேன், பயந்தேன். மலையாள சினிமாவில் பலர் எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லி என்னை ஓரங்கட்டிவிட்டார்கள். 17 வயதில், அது என்னை மனதளவில் பாதித்தது.

ஆனால் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேன். இன்று, என்னை பற்றி நினைக்கும் போது, பெருமையாக இருக்கிறது.

இப்போது, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறேன். எனது நடிப்பு வாழ்க்கை ஒரு புதிய சாப்டருக்குள் நுழைந்திருக்கிறது’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *