பிரபலமான நடிகைகளின் பட்டியலில் அவர்தான் நம்பர் ஒன். |No movies… still she’s number one

சென்னை,
தற்போது நாம் பேசும் நடிகை படங்களில் கதாநாயகியாக நடித்து வருடங்கள் ஆகிறது. இருந்தபோதும் பிரபலமான நடிகைகளின் பட்டியலில் அவர்தான் நம்பர் ஒன். அவர் யார் தெரியுமா?. வெறு யாரும் இல்லை சமந்தாதான்.
சமந்தாவை பற்றி சொல்லவே தேவையில்லை. மயோசிடிஸால் அவதிப்பட்ட சமந்தா, இப்போது குணமடைந்து வருகிறார். இதனால் படங்களில் இருந்து விலகி இருந்த சமந்தா, இப்போது மீண்டும் படங்களில் பிஸியாகிவிட்டார். கடைசியாக குஷி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த சமந்தா சமீபத்தில் சுபம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சமந்தா நடித்தார்.தற்போது மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல ஊடக நிறுவனம் சமீபத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் சமந்தா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து திரிஷா, தீபிகா படுகோன், நயன்தாரா, ராஷ்மிகா, ஆலியா பட், காஜல் அகர்வால், சாய் பல்லவி, தமன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் உள்ளனர்.