கட்டாயத்தால் எடுத்த முடிவு அல்ல, வதந்தியை உறுதி செய்த விஷால்! முக்கிய அறிவிப்பு

கட்டாயத்தால் எடுத்த முடிவு அல்ல, வதந்தியை உறுதி செய்த விஷால்! முக்கிய அறிவிப்பு


நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் மகுடம் படம் பற்றி ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இயக்குனர் ரவி அரசு மற்றும் விஷால் இடையே பிரச்சனை ஏற்பட்ட காரணத்தால் இயக்குனர் விலகிவிட்டார் என்றும், அதனால் விஷால் தானே இயக்குநராகி படம் இயக்கி வருகிறார் என சொல்லப்பட்டது.

கட்டாயத்தால் எடுத்த முடிவு அல்ல, வதந்தியை உறுதி செய்த விஷால்! முக்கிய அறிவிப்பு | Vishal Announces His Directorial Debut Magudam


இயக்குனராக என் முதல் படம்

இந்நிலையில் இந்த செய்தியை விஷால் தற்போது உறுதி செய்து இருக்கிறார். தீபாவளி வாழ்த்து சொல்லி பதிவிட்டு இருக்கும் அவர் முகுடம் படம் தான் இயக்குனராக எனக்கு முதல் படம் என தெரிவித்து இருக்கிறார்.

“இந்த நிலை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் சூழ்நிலை என்னை படம் இயக்க வைத்து இருக்கிறது. கட்டாயத்தால் எடுத்த முடிவு அல்ல, பொறுப்புட காரணமாக எடுத்த முடிவு” என விஷால் கூறி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *