பிரபாஸ்-இமான்வி படத்தின் பிரீலுக் வெளியீடு…

சென்னை,
பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் தி ராஜா சாப். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.
பிரபாஸ் அடுத்து, சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்று தீபாவளியை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வருகிற 22 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து வெளியான பிரீலுக் போஸ்டர் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இந்த பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார்கள். சமூக ஊடக பிரபலம் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.