வேகம் குறையாத ’டியூட்’…3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?

சென்னை,
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைபப்டம் 3 நாட்களில் உலகளவில் ரூ.66 கோடி வசூலை கடந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
’டியூட்’ திரைப்படம், முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்திருந்தநிலையில், 2-வது நாளில் ரூ.23 கோடி வசூலித்தது. தற்போது 3-வது நாளில் ரூ.21 கோடி வசூலித்திருக்கிறது. மொத்தம் 3 நாட்களில் ரூ. 66 கோடி வசூலித்திருக்கிறது.
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்தில் பிரதீப் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் ‘டியூட்’ படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.