ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

சென்னை,
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் தீபாவளி களை கட்டியுள்ளது. மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இருகரம் கூப்பியும், கை அசைத்தும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.