’சூர்யா47’: முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திர ஜோடி?

சென்னை,
தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் 47வது படம் குறித்த அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தற்காலிகமாக சூர்யா 47 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஆவேசம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கவுள்ளதாக தெரிகிறது.
இப்படத்தில் சூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் மலையாள நட்சத்திர ஜோடியான பகத் பாசில் மற்றும் நஸ்ரியா முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தை புதிதாகத் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் , அடுத்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.