கிட்னியை விற்றாவது படம் நடிப்பேன்…நடிகை அதிர்ச்சி கருத்து|I would act in a film even if I sold my kidney… Actress’ shocking comment

கிட்னியை விற்றாவது படம் நடிப்பேன்…நடிகை அதிர்ச்சி கருத்து|I would act in a film even if I sold my kidney… Actress’ shocking comment


சென்னை,

பிரபல நடிகை ரேகா போஜ். இவர் மிகக் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், அவர் வெளியிடும் கருத்துகள் சில சமயம் சர்ச்சையை உருவாக்கும். அவரது சமூக ஊடகப் பதிவுகள் அவ்வப்போது அப்படித்தான் இருக்கும். இதற்கிடையில், சமீபத்திய பேட்டியில் பங்கேற்ற இவர், அதிர்ச்சியூட்டும் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘படங்களில் நடிக்க நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். முன்பு, நான் சாமி சாமி என்ற பாடலில் நடித்தேன். அதற்காக என் இரண்டு தங்க வளையல்களை விற்றேன். அது எனக்கு நல்ல பெயரைக் கொண்டு வந்தது. அதன் காரணமாக, எனக்கு ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இப்போது எனக்கு படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்காக நடிப்பை விட்டுவிடமாட்டேன். தேவைப்பட்டால், நான் என் கிட்னியை விற்று சொந்தமாக படம் எடுப்பேன். நான் நேர்மையாக வாழ்கிறேன், அதனால்தான் என்னிடம் அதிக பணம் இல்லை’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *