உலக சாதனை…கர்ப்ப வதந்திகளுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த சோனாக்சி சின்ஹா|Jatadhara actress slams pregnancy rumors

உலக சாதனை…கர்ப்ப வதந்திகளுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த சோனாக்சி சின்ஹா|Jatadhara actress slams pregnancy rumors


சென்னை,

“ஜடாதாரா” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ள பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா, தான் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

“ஜடாதாரா” படம் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் சுதீர் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில், ஆடை வடிவமைப்பாளர் விக்ரம் பட்னிஸின் விழாவில் நடிகை சோனாக்சி சின்ஹா கலந்துகொண்டார். அதில் அவர் அணிந்திருந்த உடையை வைத்து கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் செய்தி பரவ தொடங்கின.

இந்நிலையில், பரவி வரும் வதந்திகளுக்கு சோனாக்சி பதில் அளித்திருக்கிறார் . மனித வரலாற்றில் மிக நீண்ட கர்ப்பத்திற்கான உலக சாதனையை தான் படைத்திருப்பதாக தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு முன்பும் அவர் கர்ப்பமாக இருப்பதாக பல முறை வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

சோனாக்சி கடந்த ஆண்டு நடிகர் ஜாகீர் இக்பாலை மணந்தார். சோனாக்சி தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *