நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் என்ன தவறு…தனுஷ் பட நடிகை பரபரப்பு கருத்து|”What’s wrong in doing intimate scenes in films?”- swara bhaskar

சென்னை,
கதாநாயகிகள் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டதாக தனுஷின் ராஞ்சனா பட நடிகை சுவாரா பாஸ்கர் கூறியுள்ளார். ஒரு காலத்தில் இதுபோன்ற காட்சிகள் இருந்திருந்தால் அவை வித்தியாசமாகப் பார்க்கப்பட்டிருக்கும் எனவும் ஆனால் இப்போது சகஜமாகிவிட்டன எனவும் கூறினார்.
சமீபத்தில், பாலிவுட் நடிகை சுவாரா பாஸ்கர் நெருக்கமான காட்சிகள் குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
’இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தேவையில்லாதபோதும் இந்தக் காட்சிகளைப் வைக்கிறார்கள். நான் பல முறை படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளேன். அதை படத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.
திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகள் இருந்தால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதை வாழ்க்கை முறையாக மட்டுமே பார்க்க வேண்டும். அப்போதுதான், திரைப்படங்களில் இதுபோன்ற விஷயங்களைப் பார்த்தாலும், நம் மூளை அவற்றைப் பற்றி தவறாக நினைக்காது’ என்றார்.