பிரபாஸ் ரசிகர்களுக்கு ’டபுள் டிரீட்’…என்ன தெரியுமா?

சென்னை,
வருகிற 23-ம் தேதி பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட உள்ளார். இதனால் அவரது படங்கள் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தி ராஜா சாப் படத்தின் முதல் சிங்கிள் பிரபாஸின் பிறந்தநாளில் வெளியாக உள்ளது.
இது ஒரு புறம் இருக்க ரசிகர்களுக்கு, இன்னொரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு பிரபாஸின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இது ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு பவுஜி என்ற தலைப்பு பரவலாகப் பரப்பப்பட்டாலும், ஹனு இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. இப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார்.