மோசமான பாட்டியின் உடல்நிலை, வீட்டிற்கு வந்த காவேரிக்கு ஏற்பட்ட சோகம்.. மகாநதி சீரியல் புரொமோ

மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் 4 சகோதரிகளின் கதை என்று ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் மகாநதி. ஆனால் இப்போது விஜய்-காவேரி காதல் கதை என்பது போல் தொடர் இரண்டு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
கடைசியாக கதையில் கங்கா வளைகாப்பு கொஞ்சம் பிரச்சனையோடு நடந்து முடிந்தது. அதாவது குமரன் தன்னால் இதை செய்ய முடியும் என பெரிய ஆர்டர் எடுத்து இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கங்கா கேட்டது போல் அவருக்கு ஒட்டியானம் வாங்கி கொடுத்தார்.
இதுதெரியாமல் கங்கா, குமரனை என்னென்னவோ பேசிவிட்டார். தற்போது அவர் மலேசியா கிளம்பிவிட்டார்.
அடுத்து சாரதா காவேரிக்கு ஸ்கேனில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினால் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொள்ள அதை செய்து முடித்தார்.
புரொமோ
தற்போது மகாநதி சீரியலின் இன்றைய எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பாட்டியை பார்க்க விஜய்-காவேரி வீட்டிற்கு வருகிறார்கள்.
அப்போது விஜய்யை பார்த்து பாட்டி யார் என கேட்க குடும்பத்தினர் ஷாக் ஆகிறார்கள். பின் விஜய்யை அடையாளம் கண்டவர் காவேரியை யார் என கேட்கிறார். காவேரி என கூற நீ தானே விஜய்யை தனியாக அழைத்து சென்றது என கோபப்படுகிறார்.