மொபைலில் முத்துவிற்கு வந்த புகைப்படம், இந்த முறை விக்குவாரா ரோஹினி… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினருக்கு என்ன ஆனது என தெரியவில்லை, அடுத்தடுத்து புரொமோக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த வாரத்திற்கான முதல் புரொமோவில், சீதாவை சமாதானம் செய்து வீட்டிற்கு செல்ல பேச வந்து முத்து, அங்கு அருண் உள்ளார் என்பது தெரியாமல் அவரை பற்றி பேசுகிறார்.
அடுத்து வித்யா திருமணத்திற்கு ரோஹினி, மீனா, முத்து அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
அப்போது ரோஹினியின் முன்னாள் கணவர் உறவினர் அவரை பார்த்துவிடுகிறார். திடீரென ரோஹினி உறவினர் மீனாவிடம் சென்ற கல்யாணி பார்த்தீர்களா என கேட்கிறார். 3வது புரொமோவில் மருத்துவர் சொன்னார் என மனோஜ் வீட்டில் நடத்திய கலாட்டா புரொமோ வந்தது.
புதிய புரொமோ
தற்போது புதிய புரொமோ ஒன்று வந்துள்ளது. முத்து-மீனா இருவரும் வித்யா, முருகன் திருமண புகைப்படங்களை பார்க்கிறார்கள்.
அதில் ரோஹினியின் அம்மா இருப்பதை பார்த்து இவர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தது போல் தெரியவில்லை. ஒருவேலை திருமணத்திற்கு வந்திருந்தால் வித்யா-முருகன் இவர்களின் யார் உறவினராக இருப்பார் என யோசிக்கிறார்கள்.
க்ரிஷ் பாட்டி விஷயத்தில் மர்மம் இருந்துகொண்டே உள்ளது அதை கண்டுபிடிக்கிறேன் என முத்து கூற அவர்கள் பேசியதை கேட்டு ரோஹினி ஷாக் ஆகிறார்.