ஆஸ்பத்திரியில் சிகிச்சை.. காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு?

ஆஸ்பத்திரியில் சிகிச்சை.. காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு?


ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு அவ்வப்போது மட்டுமே படங்களில் தலைகாட்டி வருகிறார்.

இதற்கிடையில் மீண்டும் முன்புபோல நடிக்க ஆயத்தமாகி வரும் காஜல் அகர்வால், வீறுகொண்ட வேங்கையாக புறப்பட்டுள்ளார். கடும் உடற்பயிற்சிகள் மூலம் ‘தொளதொள’வென இருந்த மேனியை, இறுக்கி ‘சிக்’ என மாற்றியுள்ளார். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது போன்று வெளியான ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் காஜலுக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் பொங்கினார்கள்.

ஆனால் மேனியில் பொலிவை தருவதற்கான ‘டீ ஏஜிங்’ சிகிச்சையை தான் அவர் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மீண்டும் சினிமாவை தன்வசப்படுத்தவும், விட்ட இடத்தை பிடிப்பதற்காகவுமே இந்த முயற்சியாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *