40 வருட முன்னணி தொலைக்காட்சி மூடப்படுகிறது.. வேதனையில் ரசிகர்கள்

MTV
மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சம் தொலைக்காட்சி. இதில் கடந்த 40 வருடங்களாக மக்களை மகிழ்வித்து வருகிறது MTV. ஆங்கில இசை தொலைக்காட்சியான MTV கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நியூயார்க் நகரை தலைமையகமாக கொண்ட MTV, பாரமவுண்ட் மீடியா பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் நெட்வொர்க்ஸ் பிரிவின் MTV என்டர்டெயின்மென்ட் குரூப் துணை பிரிவின் முதன்மை சொத்து ஆகும்.
ரசிகர்கள் வேதனை
இந்த நிலையில், 40 வருடங்களாக செயல்பட்டு வரும் MTV தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்படப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற டிசம்பர் 31ஆம் தேதி முதல் இந்த ஒளிபரப்பு நிறுத்தம் என கூறப்படுகிறது. இந்த தகவல் MTV ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.