மகனை பற்றி ஓபனாக பேசிய நடிகை கரீனா கபூர்

மும்பை,
சோஹா அலி கானுடன் ஒரு பாட்காஸ்டில் பேசிய கரீனா, தனது மகன் தைமூர் அலி கானுக்கு நடிப்பில் விருப்பமில்லை என்றும், விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் தனக்கு நட்பு இருக்கிறதா என்று தைமூர் அடிக்கடி கேட்பதாகவும், நடிகர்களை விட விளையாட்டு வீரர்கள் மீது மோகம் அதிகமாக இருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “என் மகனுக்கு இசை, சினிமாவைவிட விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். விராட் கோலி, ரோஹித் ஷர்மா உங்களின் நண்பர்களா? அவர்களிடம் இருந்து பேட்டை பரிசாக வாங்கி தர முடியுமா? மெஸ்ஸியுடன் பேசுவீர்களா? என என்னிடம் அடிக்கடி கேட்பார். அவரின் தந்தை சயிப் அலிகானை பார்த்து சமைப்பது, விளையாடுவது போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்” என்றார்.