நம்பிக்கை கொடுத்த சிம்பு…ஹரிஸ் கல்யாண் நெகிழ்ச்சி|Simbu, who gave me hope…Haris Kalyan’s resilience

நம்பிக்கை கொடுத்த சிம்பு…ஹரிஸ் கல்யாண் நெகிழ்ச்சி|Simbu, who gave me hope…Haris Kalyan’s resilience


சென்னை,

ஆக்சன் ஹீரோவாக சரியாக நடித்துள்ளதாக டீசல் படத்தின் டிரெய்லரை பார்த்து, நடிகர் சிம்பு பாராட்டியது நம்பிக்கை கொடுத்துள்ளதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் அனைவரும் சொல்வதுபோல கொஞ்சம் அதிகமாகதான் ஆக்சன் ஹீரோவாக நடித்து விட்டோமோ என சந்தேகமாக இருந்தது எனவும் பிறகு சிம்பு பாராட்டியது நம்பிக்கையை கொடுத்தது எனவும் ஹரிஷ் கல்யாண் தெரிவித்தார்.

பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து படங்களின் மூலம் வெற்றிகளைப் பெற்ற ஹரிஷ், இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது வெற்றியைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *