10 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகும் நடிகை காம்னா

நடிகை காம்னா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல நடிகைகள் இப்போது ஆக்டீவாக இல்லை.
சிலர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்கள், பலர் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் உள்ளது. அப்படி சுமார் 10 வருடங்களுக்கு முன் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் காம்னா ஜேத்மாலினி.
ஜெயம் ரவியின் இதயத் திருடன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமானார்.
கடந்த 2014ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தவர் குழந்தை பிறந்ததும் சினிமா பக்கமே வரவில்லை.
ரீ-என்ட்ரி
தற்போது காம்னா 10 வருடங்கள் கழித்து 2025ல் தெலுங்கு படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தெலுங்கில் உருவாகி உள்ள கேராம்ப் படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், வரும் அக்டோபர் 18ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.