கயாடு லோகரின் ‘பங்கி’…திரைக்கு வருவது எப்போது?

சென்னை,
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் தனது அழகால் இளம் இதயங்களை வென்ற கயாடு லோகர், தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஸ்வக் சென் நடிக்கிறார்.
ஜாதி ரத்னலு படத்தை இயக்கிய கே.வி. அனுதீப் இயக்கும் இப்படத்திற்கு ‘பங்கி’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கயாடு தற்போது தமிழில், அதர்வாவுடனும், சிம்புவுடனும் படங்களில் நடித்து வருகிறார்.