புதிய அவதாரம் எடுத்த ஸ்ரீலீலா….வைரலாகும் பர்ஸ்ட் லுக்|Sreeleela heats up the internet with ‘Agent Mirchi’ look

சென்னை,
குண்டூர் காரம், தமகா போன்ற படங்களில் கவர்ச்சிகரமான வேடங்களிலும், புஷ்பா 2 இல் சிறப்புப் பாடலிலும் நடித்த ஸ்ரீலீலா, இப்போது தனது பாணியை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஒரு காதல் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் இவர் தற்போது ஆக்சன் பக்கம் திரும்பி இருக்கிறார்.
தனது அடுத்த படத்தில் “ஏஜென்ட் மிர்ச்சி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் ஸ்ரீலீலா புதிய தோற்றத்தில் காணப்படுகிறார்.
வருகிற 19-ம் தேதி இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாக உள்ளது. தனது துணிச்சலான புதிய அவதாரத்தின் மூலம், ஸ்ரீலீலா கவர்ச்சியைப் போலவே ஆக்சனிலும் கலக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.