கடலில் 48 நாட்கள்…சிறுநீரை குடித்து… – ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்|harish kalyan stunned after knowing about incredible survival story fisherm

சென்னை,
ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி இணைந்து நடித்திருக்கும் படம் ‘டீசல்’. தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்ட இந்த படம் வருகிற 17 அன்று வெளியாக உள்ளது. பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து படங்களின் மூலம் வெற்றிகளைப் பெற்ற ஹரிஷ், இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது வெற்றியைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறார்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டியில், இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான உரையாடலைப் பற்றிப் பேசினார்.
அவர் கூறுகையில், ’டீசல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு, நாங்கள் இரண்டு , மூன்று நாட்கள் கடற்கரைக்குச் சென்றோம். கடலுக்குள் கூடச் சென்றோம். அப்போது 70 வயது மதிக்கத்தக்க மீனவர் ஒருவர் என்னிடம் ஒரு அதிர்ச்சி தகவலை சொன்னார். புயலால் கடலில் 48 நாட்கள் சிக்கியதாகவும் தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறினார்’ என்றார்.