’தீபிகா கேட்டால் கொடுக்கத்தான் வேண்டும்…’ – ஷாலினி பாண்டே

சென்னை,
மற்ற தொழில்போல திரைப்படத் துறை இல்லை. இதில் வேலை நேரம் நிரணயிக்கப்படவில்லை. பாலிவுட் நட்சத்திர நடிகை தீபிகா படுகோன் எட்டு மணி நேர வேலை நேரத்தை மற்ற எல்லா இடங்களிலும் போலவே இங்கும் பின்பற்ற வேண்டும் என்று கூறி வருகிறார்.
கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் படங்களில் இருந்து அவர் வெளியேறியதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை ஷாலினி பாண்டே சமீபத்தில் தீபிகாவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘எனக்கு தீபிகா படுகோனை ரொம்ப பிடிக்கும்.எனது பள்ளி பருவத்திலிருந்தே அவரை பார்த்து வருகிறேன். அவர் ஒரு சிறந்த நடிகை. தனக்குத் தேவையானதைப் பற்றி பயமின்றிய பேசுகிறார். மன அரோக்கியமும் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவர் விரும்புவதை கொடுக்க வேண்டும்’ என்றார்.
ஷாலினி பாண்டேவின் முதல் படமான அர்ஜுன் ரெட்டி மிகவும் பிரபலமானது. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான தனுஷின் இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.