'அதனால் முத்தக்காட்சிக்கு பயந்தேன்' – வைரலாகும் நடிகையின் அதிர்ச்சியூட்டும் கருத்துகள்

சென்னை,
பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க மறுத்துவிட்டதாக சோனம் பஜ்வா தெரிவித்துள்ளார். குறிப்பாக நெருக்கமான காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளுக்கு தான் மறுப்பு தெரிவித்ததாக அவர் கூறினார்.
நடிகை சோனம் பஜ்வா பாலிவுட் படங்களில் பிஸியாக உள்ளார். தற்போது அவர் ஏக் தீவானே கி தீவானியாத் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில், படத்தின் புரமோஷன் பணிகளில் அவர் பிஸியாக உள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சோனம், பாலிவுட் படங்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பாலிவுட்டில் பல படங்களுக்கு நான் நோ சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் என் சொந்த மாநிலமான பஞ்சாப் மக்கள் இதுபோன்ற விஷயங்களை ஏற்றுக்கொள்வார்களா?…இதெல்லாம் படத்திற்காகத்தான் என்பதை என் குடும்பத்தினர் புரிந்துகொள்வார்களா? என்று நான் பயந்தேன். அதனால் தான் அந்த நேரத்தில் படங்களில் முத்தக் காட்சிகளில் நடிக்க நான் மிகவும் பயந்தேன்’ என்றார். இருப்பினும் சோனம், தனது பெற்றோர் தனக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தார்.