ஸ்ரீநிதி ஷெட்டி, ராஷி கன்னா நடித்துள்ள படத்தின் டிரெய்லர் வெளியீடு

பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா, சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் காதல் படமான தெலுசு கடா மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்த காதல் கதை வருகிற 17 ம் தேதி வெளியாக உள்ளது.
கதாநாயகன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கும் கதையமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் “மல்லிகா கந்தா” ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.