“லவ் டுடே 2” படத்திற்கான அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

சென்னை,
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, இவரது நடிப்பில் வெளியான “டிராகன்” படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இவர் தற்போது கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் “டியூட்” படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளன.
இந்த நிலையில், டியூட் படத்தின் புரமோஷனுக்காக நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது “லவ் டுடே 2” படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, “லவ் டுடே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான யோசனையும் இருக்கிறது. ஆனால், இப்போது நடக்காது. நான் வேறு கதைக்களங்களையும் எழுத வேண்டும் என நினைக்கிறேன். இவை முடிந்தபின், லவ் டுடே – 2 படத்தை ஆரம்பிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.