வைரலாகும் நடிகை நபா நடேஷின் பதிவு|Naba Natesh’s post goes viral

சென்னை,
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கலக்கி வரும் நடிகை நபா நடேஷ். சுதீர் பாபு நடித்த நன்னு டோச்சுகுண்டுவதே படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான நபா நடேஷ், பின்னர் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார்.
பின்னர், அவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் எதிர்பார்த்த நட்சத்திர அந்தஸ்து கிடைக்கவில்லை.
இருப்பினும், சமூக ஊடகங்களில் அவர் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்கள் என்னை சிரிக்க வைத்தபோது என்ற தலைப்பிட்டு இதனை பகிர்ந்துள்ளார்.