ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்..

ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்..

ஜோசியரால் சேரன் எடுத்த முடிவு

கடந்த வாரம் அய்யனார் துணை சீரியலில் சேரனை பார்க்க வந்த பெண் வீட்டார். ஜோசியர் ஒருவரை அழைத்து வந்திருந்தனர். சேரனின் ஜாதகத்தை பார்த்த அந்த ஜோசியர், இவர் இந்த வீட்டில் இருந்தால் தம்பிகளின் வாழ்க்கை நன்றாக இருக்காது, இந்த வீட்டில் ஒரு பெண் கூட தங்கமாட்டாள் என கூறிவிடுகிறார்.

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! | Ayyanar Thunai Serial This Week Promo Video

இதனால் மனம் உடைந்துபோன சேரன், தம்பிகளுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன தம்பிகள் மற்றும் நிலா, சேரனை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். இறுதியில் சோழன் தனது அண்ணன் சேரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மீண்டும் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! | Ayyanar Thunai Serial This Week Promo Video

வரும் வாரத்தின் ப்ரோமோ

இந்த நிலையில், வரும் வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், ஜோசியர் சொன்னது தனக்கு இன்னும் பயமாக இருப்பதாக சேரன் கூறுகிறார். இதனால், நான்கு ஜோசியர்களை அழைத்து வருகிறோம், அவர்களும் இதேபோல் சொல்கிறார்களா என்பதை பார்ப்போம் என்கிறார் சோழன்.

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! | Ayyanar Thunai Serial This Week Promo Video

அதேபோல் நான்கு ஜோசியர்கள் வீட்டிற்கு வர, சேரனின் ஜாதகத்தை பார்த்து ‘அடடா இப்படியொரு சிறப்பாக ஜாகதமா’ என வியப்படைகிறார்கள். இதனால் சேரன் மகிழ்ச்சியடைகிறார். ஆனால், வீட்டிற்கு வந்த ஜோசியர்கள் அனைவரும், குலதெய்வத்தை வழிபட வேண்டும் என கூறுகின்றனர். இதனால் அய்யனார் துணை குடும்பம் அடுத்ததாக குலதெய்வத்தை வழிபட செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *