ஜான்வி கபூர் படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்

சென்னை,
2015-ம் ஆண்டு வெளியான மசான் படத்திற்குப் பிறகு இயக்குனர் நீரஜ் கய்வானின் கம்பேக் படமான ஹோம்பவுண்ட் ,விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை தற்போது பா.ரஞ்சித்தும் பாராட்டி இருக்கிறார்.
அதன்படி, ” மசானுக்குப் பிறகு நீரஜ் கய்வானின் சிறந்த கம்பேக் ” என்றும் “இந்திய சினிமாவிற்கு ஒரு புதிய சக்திவாய்ந்த படம்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும்,ஹோம்பவுண்ட் திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக தேர்வாகி இருப்பதற்காக வாழ்த்துகளையும் தெரிவித்தார். இப்படத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் மற்றும் விஷால் ஜெத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.