"கருப்பு"- ஆர்.ஜே பாலாஜி சொன்ன வார்த்தை…உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தின் அப்டேட் பகிர்ந்துள்ளார். அதன்படி, இப்படத்தில் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,
“கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம், ஆனால் சில வேலைகள் காரணமாக வெளியிட முடியவில்லை.
இந்த தீபாவளியிலிருந்து முதல் பாடல் வெளியாகும்’ என்றார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.