“மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த செல்வராகவன்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தில் செல்வராகவன் நடித்துவருகிறார். டென்னிஸ் மஞ்சுநாத் ஏற்கெனவே, டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். இந்தப் படத்தில் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள். விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது. இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், செல்வராகவன் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துவிட்டதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.