மருத்துவமனையிலிருந்து நடிகை ஸ்ருதிகா வெளியிட்ட வீடியோ

நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் பிரபலம் ஆனார். மறைந்த மூத்த நடிகர், தேங்கா ஸ்ரீநிவாசனின் பேத்தியான இவர், இளம் வயதில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர், முதன்முதலில் நடித்த படம் ஸ்ரீ. இந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதில் அவர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். மாதவனுடன் நளதமயந்தி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தித்திக்குதே படத்திலும் துணை கதாப்பாத்திரமாக வந்தார். ஒரு சில படங்களிலேயே நடித்து, திரையுலகை விட்டு விலகிய இவர், பின்னர் திரையுலகை விட்டு விலகினார். அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, செட்டில் ஆகிவிட்டார். இவர் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருகிறார். வெளிநாட்டிற்கும் அழகுசாதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறார். இவர் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களுக்கு இவரே விளம்பரத் தூதராகவும் உள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இவருக்கு ரசிகர்கள் கூடினர். தனியாக சமையல் நிகழ்ச்சியையும் தொடங்கி, அதிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார் ஸ்ருதிகா. இவர், இந்தி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தேசிய அளவில் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிகா தனது உடலில் இருந்த பெரிய பிரச்சனைக்காக சர்ஜரி செய்துகொண்டதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அது என்ன பிரச்சனை என்பதை அவர் குறிப்பிடவில்லை. உடலில் பிரச்சனையுடன் தான் தொடர்ந்து பணியாற்றி வந்ததாகும், அதை சரி செய்ய தற்போது மேஜர் சர்ஜரி நடந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.