போலி ஏஐ படங்கள் – நடிகை பிரியங்கா மோகன் வேதனை |Priyanka Mohan raises her voice on usage of AI ethically

சென்னை,
கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் நடிகை பிரியங்கா மோகன் விளக்கம் கொடுத்துள்ளார்.
போலி படங்களை பகிர்வதையும், பரப்புவதையும் தயவுசெய்து நிறுத்துங்கள் என நடிகை பிரியங்கா மோகன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், “என்னை தவறாக சித்தரிக்கும் வகையில் சில ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. பொய்யான காட்சிகளை பகிர்வதை தயவு செய்து நிறுத்துங்கள். ஏஐயை நல்ல படைப்பாற்றலை உருவாக்க பயன்படுத்துங்கள். நாம் எதை உருவாக்குகிறோம், எதை பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்
அண்மையில் சாய் பல்லவியின் போலி ஏஐ புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.