"இட்லி கடை" படத்திலிருந்து "என்ன சுகம்" வீடியோ பாடல் வெளியீடு

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இப்படத்திலிருந்து “என்ன சுகம்” என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். பாடகி சுவேதா மேனனுடன் இணைந்து அவரே இந்த பாடலை பாடியும் உள்ளார்.