’தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களுக்கு திரைகள் கிடைப்பது எளிதல்ல’ – பிரபல நடிகர்

சென்னை,
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் போல, தெலுங்குப் படங்களுக்கு தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை என்று தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் கூறினார்.
தெலுங்கு படங்களுக்கு தமிழ்நாட்டில் திரையரங்குகள் வழங்கப்படுவது எளிதில்லை எனவும் ஆனால், தமிழ் படங்களுக்கு நாம் முதலிடம் அளிப்பதாகவும் கூறினார். அதற்கு கிரண், பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தை உதாரணமாகக் கூறினார்.
கிரண் அப்பாவரம் நடித்துள்ள கே ராம்ப் படம் வருகிற 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.. அதற்கு ஒரு நாள் முன்னதாக டியூட் வெளியாக உள்ளது. டியூட் படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு மாநிலங்களில் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளன.