30 வருடங்கள் முன்பே இத்தனை லட்சமா.. ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கிய கவுண்டமணி

அந்த காலத்தில் ஹீரோவுக்காக படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஒருபக்கம் என்றால், கவுண்டமணியின்
காமெடிக்காக படம் பார்க்க வருபவர்களும் அதிகம்.
அப்படி கவுண்டமணி செந்தில் காம்போவின் காமெடிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
சம்பளம்
இந்நிலையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் நாட்டாமை படத்தில் நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றி பேசி இருக்கிறார்.
ஹீரோ சரத்குமாருக்கு 5 லட்சம் ருபாய் சம்பளம், அதே போல கவுண்டமணிக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்பட்டது என கே.எஸ்.ரவிக்குமார் கூறி இருக்கிறார்.
30 வருங்களுக்கு முன் இது மிகப்பெரிய தொகை தான்.