திரையுலகில் ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்… – தீபிகா படுகோனே

திரையுலகில் ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்… – தீபிகா படுகோனே


சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்தின் 2ம் பாகத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின.

தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதே இதற்கு காரணம் எனப் பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக முதன்முறையாக தீபிகா படுகோன் பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார். “இந்திய திரையுலகில் பல்வேறு முன்னணி ஆண் நடிகர்கள் பல வருடங்களாக தினமும் 8 மணி நேரம் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்கள். அதெல்லாம் தலைப்பு செய்தியாகவில்லை. ஆனால், நான் சொன்னால் மட்டும் பெரிய செய்தியாகிவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை. சில ஆண் நடிகர்கள் வார நாட்களில் மட்டுமே நடிப்பார்கள், வார இறுதி நாட்களில் படப்பிடிப்புக்கு வரமாட்டார்கள்.

இந்திய திரைப்படத் துறை ஒரு ‘தொழில்’ என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் ஒருபோதும் அது தொழில் துறை போன்று செயல்பட்டதில்லை என்பதுதான் பெரிய பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். இது மிகவும் வரையறுக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. மேலும் சரியான அமைப்புகளையும் கட்டமைப்பையும் நாம் கொண்டு வர வேண்டிய நேரம் இது.

இப்போது நிறைய பெண்களும், தாய்மார்களும் எட்டு மணி நேரம் வேலை செய்யத் தொடங்கி இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவை தலைப்புச் செய்திகளில் வருவதில்லை. எனது வாழ்க்கை முழுவதும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். எப்போதும் அமைதியாக என் போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். சில நேரங்களில் அந்தப் போராட்டங்கள் பகிரங்கமாகிவிடும், நான் வளர்க்கப்பட்ட விதம் அப்படி இல்லை. ஆனால் அவற்றை அமைதியாகவும் கண்ணியமாகவும் எதிர்கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *