நடிகை திரிஷாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்

திரிஷா
திரையுலகில் 22 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தில் திரிஷா இருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி, ஐடென்டிட்டி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்ததாக கருப்பு, விஸ்வம்பரா படங்கள் தயாராகி வருகின்றன.
சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை திரிஷா, இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் செய்திகள் உலா வரும். ஆனால், திரிஷா தரப்பில் இருந்து உறுதியாக எதுவும் இதுவரை கூறப்படவில்லை.
திருமணம்
இந்நிலையில், நடிகை திரிஷாவுக்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பம் முடிவு செய்து, புதிதாக வரன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரன், சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் என கூறப்படுகிறது.
இரு குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக பழக்கம் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இதுவரை இந்த செய்தி குறித்து திரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
பின்குறிப்பு: இது சினிஉலகத்தின் சொந்த கருத்து அல்ல, இது முன்னணி ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.