திரிஷாவுக்கு திருமணமா?… தீயாக பரவும் தகவல்

சென்னை,
தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தமிழ் மற்று தெலுங்கில் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள திரிஷா ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்.
அவரது படங்களை தாண்டி தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் பேசப்படுவது வழக்கம். இந்தநிலையில், திரிஷாவின் திருமண செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதன்படி, சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்து திரிஷாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.