முன்பு 66, இப்போது 57…தொடர்ந்து அதிக வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ஆஷிகா|Ashika Ranganath confirms film with Ravi Teja

சென்னை,
கன்னட நடிகையான ஆஷிகா ரங்கநாத், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பெரும்பாலும் அதிக வயதுடைய நட்சத்திரங்களுடன் நடிக்கிறார். அவருக்கு இன்னும் 30 வயது கூட ஆகாதநிலையில், தன்னை விட 25 , 30 வயது மூத்த முன்னணி நடிகர்களுடன் திரை இடத்தைப் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் 66 வயதான நாகார்ஜுனாவுடன் “நா சாமி ரங்கா” படத்தில் நடித்தார், தற்போது 70 வயதான சிரஞ்சீவியுடன் “விஸ்வம்பரா” படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த வரிசையில், ஆஷிகா இப்போது 57 வயதான ரவி தேஜாவுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் நடந்த தனது கன்னட படமான “கதா வைபவா” படத்தின் புரமோஷனின்போது, கிஷோர் திருமலா இயக்கும் ரவி தேஜாவின் படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக ஆஷிகா தெரிவித்தார்.