MGR Film Institute Complex shooting site fee details released

MGR Film Institute Complex shooting site fee details released



சென்னை,

தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌ திரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனம்‌ கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ ஒரே கல்வி நிறுவனம்‌ ஆகும்‌. இந்நிறுவனம்‌ திரைப்படத் துறை மற்றும்‌ தொலைக்காட்சி துறையில்‌ மிகச்‌ சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும்‌, இயக்குநர்களையும்‌ உருவாக்கி வரும்‌ தனித்துவம்‌மிக்க நிறுவனமாகும்‌.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம் திரைப்படத்துறையினர், சின்னத்திரை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியோர் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி பெற்று பயன்பெறலாம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.5.09 கோடி செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தினை 25.08.2025 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒப்பனை அறைகள், அலங்கார உடை அறை, உணவு அருந்தும் அறை ஆகியவை இணைந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய சுமார் 17,517 சதுர அடியில் அமைந்துள்ள இந்த படப்பிடிப்புத்தளம் திரைப்படத்துறையினருக்கு மிகுந்த பயனளிக்கும்.

மேலும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புக்கான கட்டணங்களை கீழ்க்கண்டவாறு அரசு நிர்ணயித்து ஆணையிடப்பட்டுள்ளது.

வ.எண் விபரம் (ஒரு கால்ஷீட் = 12 மணிநேரம்) (1 Call Sheet = 12 Hours) படப்பிடிப்பு கட்டணம் 2025 ரூ. 18% GST கட்டணம் (SGST 9% + CGST 9%) ரூ.

1. படப்பிடிப்புத்தளம் (குளிர்சாதன வசதியுடன் ) Shooting floor (With AC) 60,000 10,800

2. படப்பிடிப்புத்தளம் (குளிர்சாதன வசதியில்லாமல் ) Shooting floor (Non AC) 40,000/- 7,200/-

3. செட் ஒர்க்ஸ் மற்றும் செட் ஒர்க்ஸ் பிரிப்பதற்கும் (குளிர்சாதன வசதி இல்லாமல்) (Set work/ Removal set works (Non Ac) 35,000/- 6,300/-

4. ஒப்பனை அறை (குளிர்சாதன வசதியுடன் ) Makeup Room (with AC) 7,000/- 1,260/-

5. ஒப்பனை அறை (குளிர்சாதன வசதி இல்லாமல் ) Makeup Room (Non AC) 4,000/- 720/-

6. சிறு அறை (குளிர்சாதன வசதி இல்லாமல் ) Mini Hall (Non AC) 25,000/- 4,500/-

7. சிறு அறை நடைக்கூடம் வராண்டா (Mini Hall Corridor Veranda) 25,000/- 4,500/-

8. காத்திருப்புக் கட்டணம் நாள் ஒன்றுக்கு (Waiting Charges per day) 30,000/- 5,400/-

9. துப்புரவுக் கட்டணம் (Cleaning charges) 6,000/- —

மேற்படி படப்பிடிப்பு கட்டணங்களை வசூலிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:

· இவ்வளாகத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்கான அனுமதி, இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை தலைமைச்செயலகம், சென்னை -9 அவர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்.

· தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் , தரமணி , சென்னை -113 படப்பிடிப்பு கட்டணங்களை முதல்வர் (மு.கூ.பொ)அவர்கள் வசூலிப்பார்.

· குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்திற்கான முன்வைப்புத் தொகை ரூ.20,000/- வசூலிக்கப்படும். படப்பிடிப்பு முடிந்த பின், விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்.

· அட்டவணையின்படி, ஒவ்வொரு கால்ஷீட்டுக்கும் 12 மணிநேரம் எனப் படப்பிடிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடத்த விரும்பும் திரைப்படத் துறையினர், சின்னத்திரை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியோர் இயக்குநர் ,செய்தி மக்கள் தொடர்புத்துறை அவர்களிடம் முன்அனுமதி பெற்று, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி, உரிய அனுமதியுடன் இவ்வசதிகளைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *