பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன் – ராஷி கன்னா, Waiting with big dreams

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷி கன்னாவின், அலட்டல் இல்லாத நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் தாண்டி இதர மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கன்னா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ‘ஆக்டிவ்’ ஆக இருக்கிறார். கிடைக்கும் நேரங்களில் ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷி கன்னா, ‘‘ரசிகர்களின் விருப்பத்துக்குரிய கதாநாயகியாக சினிமாவில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.