நடிக்கும் படங்களில் பாகுபாடு பார்ப்பதில்லை – நடிகை சோனியா அகர்வால்

கோப்புப்படம்
விக்ராந்த், சோனியா அகர்வால் இணைந்து ‘வில்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். எஸ்.சிவராமன் இயக்கியுள்ள இந்த படத்தை புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து சோனியா அகர்வால் கூறும்போது, “நீதிமன்ற நடைமுறைகளை யதார்த்தமாகவும், இயல்பை மீறாமலும் படத்தில் சொல்லியிருக்கிறோம். முக்கியமாக சொத்து விவகாரங்கள் உள்பட பல்வேறு குழப்பங்களை தீர்க்கும் வகையில் கதை இருக்கும்.
என்னை பொறுத்தவரை, சிறிய படங்கள், பெரிய படங்கள் என்று நான் வித்தியாசமே பார்ப்பது கிடையாது. நடிக்கும் படங்களில் உண்மையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காதல் கொண்டேன் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வசூல் குவித்தது தெரிந்த கதை. எனவே நான் நானாக இருக்கிறேன், இனியும் அப்படித்தான்.
இந்த படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகும் சவுரவ் அகர்வாலுக்கும் எனக்கு தந்த ஆதரவை ரசிகர்கள் தரவேண்டும்” என்று கூறினார்.