Ui திரை விமர்சனம்

Ui திரை விமர்சனம்


கன்னட நடிகர் உபேந்திரா எழுதி இயக்கியிருக்கும் டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்ஷன் படமான “Ui” விமர்சனம் குறித்து பார்ப்போம்.

Ui திரை விமர்சனம் | Ui Movie Review

கதைக்களம்



நாமம் அடையாளத்தை தலைப்பாக கொண்டு திரைப்படம் ஒன்று வெளியாகிறது.

அப்படத்தை பார்த்தவர்களில் பலர் உடனே மனமாற்றம் ஏற்பட்டு இயல்பை மீறி நடந்துகொள்வதுடன் மீண்டும் படத்தை பார்க்க செல்கிறார்கள்.



மற்றொரு புறம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கடுமையான போராட்டங்கள் நடக்கின்றன.

பிரபல விமர்சகர் எப்படி இப்படத்திற்கு விமர்சனம் செய்வது என்று குழம்பி, படத்தை எடுத்த இயக்குநரையே பார்க்க செல்கிறார்.

Ui திரை விமர்சனம் | Ui Movie Review


அங்கு இயக்குநர் எடுக்க நினைத்து வேண்டாம் என உதறிய கதை விமர்சகர் கையில் கிடைக்க, அதனை அவர் படிப்பது படமாக விரிகிறது.

இறுதியில் விமர்சகருக்கும், நமக்கும் விடை கிடைத்ததா என்பதே இப்படத்தின் கதை.
 

படம் பற்றிய அலசல்



வித்தியாசமான கதைகளை வித்தியாசமான கோணத்தில் படமாக எடுக்கும் உபேந்திரா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சமூகம், அரசியலை கலந்து சொல்லக்கூடிய டிஸ்டோபியன் ஜானரில் வெளியாகியுள்ள Ui படத்தின் பிரதான கதை எதார்த்த நடைமுறையை கிண்டலாக சொல்வது தான்.


ஏவால் ஆப்பிளை சாப்பிட்டதால் உலகம் எப்படி மாறியது என்பதில் இருந்து கதை தொடங்குகிறது.

பின்னர் கல்கி அவதாரம் வந்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு உலகம் எப்படி செல்லும் என கற்பனையாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

Ui திரை விமர்சனம் | Ui Movie Review

அதாவது கடவுள், சாதி, மதம் நம்பிக்கைகளால் மக்களுக்குள் எப்படி எல்லாம் பிரிவினை ஏற்பட்டுள்ளது என்பது காட்சிகள் வாயிலாகவும், வசனங்கள் வழியாகவும் கடத்தியிருக்கும் உபேந்திராவுக்கு ஒரு சல்யூட்.


ஆனாலும் கதை ஆரம்பிக்க சிறிது நேரம் பிடிப்பது அயற்சி.

மக்களை வைத்து எப்படி அரசியல் செய்யப்படுகிறது என்பதையும், திரைப்படங்களில் அதையே காட்டி எப்படி பணம் பார்க்கிறார்கள் என்பதையும் தைரியமாக கூறியிருக்கிறார் இயக்குநர்.

விஷுவலாக பிரம்மாண்டமாக தெரியும் படத்தை அஜனீஷ் லோகேஷின் இசை தாங்கி நிற்கிறது.

Ui திரை விமர்சனம் | Ui Movie Review

காமெடி காட்சிகள் அந்தளவுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், அடுத்து என்ன நடக்க போகிறது என நினைக்க வைக்கும் திரைக்கதையில் ஜெயிக்கிறது Ui.

இப்படம் பிடிக்குமா என்பதை விட எல்லோருக்கும் புரியுமா என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.  

க்ளாப்ஸ்



கதை



திரைக்கதை



பிரம்மாண்டம்



பல்ப்ஸ்



எல்லோருக்கும் புரியுமா என்பதே சந்தேகம்




மொத்தத்தில் வித்தியாசமான திரைப்படத்தை தேடி தேடிப் பார்ப்பவர்களுக்கு புது அனுபத்தை இப்படம் தரும். 

Ui திரை விமர்சனம் | Ui Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *