ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் கீர்த்தி ஷெட்டியின் 3 படங்கள்

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
அதனை தொடர்ந்து வா வாத்தியார், ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், வா வாத்தியார் படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
அதுமட்டுமில்லாமல், ஜீனி படமும் டிசம்பர் மாதத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு வா வாத்தியார், ஜீனி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய 3 படங்களும் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாக இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.