வருவார், ஏமாற்றுவார், குழந்தை கொடுப்பார்..ரங்கராஜ் மீது ஜாய் வழக்கறிஞர் ஆவேசம்…

வருவார், ஏமாற்றுவார், குழந்தை கொடுப்பார்..ரங்கராஜ் மீது ஜாய் வழக்கறிஞர் ஆவேசம்…


மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா பற்றிய விவகாரம் தான் ஒன்றரை மாதங்களாக டாப் ஹைலெட் நியூஸாக இருந்து வருகிறது.

தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை ஜாய் இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

வருவார், ஏமாற்றுவார், குழந்தை கொடுப்பார்..ரங்கராஜ் மீது ஜாய் வழக்கறிஞர் ஆவேசம்... | Joy Crizildaa Advocate Blamed Rangaraj And Police

ஜாய் கிரிசில்டா என்னை ஏமாற்றிவிட்டார்

இதுகுறித்து பலர் விமர்சித்து பேசியநிலையில், ஜாய் கிரிசில்டாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். ஜாய் கிரிசில்டா என்னை ஏமாற்றிவிட்டார். நான் வைத்திருந்த நம்பிக்கையை ஜாய் கிரிசில்டா தவறாக பயன்படுத்தினார். ஜாய் கிரிடில்டாவின் பேட்டியால் எனது குழந்தைகள் பாதிப்பு என்று உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா சார்பில் அவரது வழக்கறிஞர், மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒன்றரை மாதமாகியும் அந்த புகார் எங்ம்கு இருக்கிறது என்று தெரியவில்லை. இதுவரை அந்த புகார் குறித்து விசாரிக்கவில்லை. அடையார் காவல் நிலையத்தில் இருந்து கால் செய்து எங்களுடைய காவல் நிலையத்திற்கு இந்த புகார் வரவில்லை என்று கூறுகிறார்கள்.

விசாரணை

அதேபோல் நிருவான்மியூர் காவல் நிலையத்திலும் கூறுகிறார்கள். ஜாய்க்கு கால் செய்து எங்கள் எல்லைக்கு இந்த புகார் வரவில்லை என்றும் கூறுகிறார்கள்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் எந்த காவல் எல்லைக்குள் வரும் என்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தெரியும், ஆனால் சரியான காவல் நிலையத்திற்கு அவர்கள் அனுப்பவில்லை. எந்த விசாரணையும் தொடங்கவில்லை.

அதன்பின் ஆயிரம் விளக்கு பகுதியில் புகார் கொடுத்தும் 4 நாட்களுக்கு பின் காவல்துறையினர் ஜாய் கிரிஸில்டாவை அழைத்து விசாரித்தனர். காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு தான் முடிந்தது.

இதன்பின் மாதம்பட்டி ரங்கராஜை விசாரணை செய்தப்பின் ஊடகத்திற்கு தெரியக்கூடாது என்று பின்வாயில் வழியாக அனுப்பியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

வருவார், ஏமாற்றுவார், குழந்தை கொடுப்பார்..ரங்கராஜ் மீது ஜாய் வழக்கறிஞர் ஆவேசம்... | Joy Crizildaa Advocate Blamed Rangaraj And Police

குழந்தை கொடுப்பார்

எல்லோருக்கும் தெரிந்த ஒரு குற்றம் செய்த நபர் மீது கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் விசாரிக்கவில்லை என்றால் சாதாரண படிக்காத கிராமப்புற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும்.

வருவார், ஏமாற்றுவார், குழந்தை கொடுப்பார், சமுதாயத்தில் எங்குமானாலும் செல்வார், அவர்மீது எந்தவொரு புகாரும் எடுக்கப்படாது என்றால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று ஜாய் கிரிஸில்டாவின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *