Sidhu Jonnalagadda believed in my story instantly

Sidhu Jonnalagadda believed in my story instantly


சென்னை,

சிவகார்த்திகேயன், சமந்தா, காஜல் அகர்வால், நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய பிரபல காஸ்டியூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா, இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

அவர் இயக்கத்தில் சித்து ஜொன்னலகடா கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு “தெலுசு கடா” எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் ராசி கன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து நீரஜா கோனா சில விஷயங்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில்,

’இந்தக் கதையை நான் முதலில் நிதினிடம் கூறினேன். அவர் இது சித்துவுக்கு நன்றாகப் பொருந்தும் என்று கூறினார். நான் சித்துவிடம் ஸ்கிரிப்டைச் சொன்னபோது, ​​அவர் உடனே ஓகே சொன்னார். அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும்’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *