விஷாலுக்கு ஜோடியாகும் கயாடு லோகர்…இயக்குனர் இவரா?

சென்னை,
சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிகை கயாடு லோகர் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக விஷால் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
இதில், இரண்டு கதாநாயகிகள் கமிட் ஆகி இருக்காங்களாம் என்று கூறப்படும்நிலையில், அதில் ஒருவர் கயாடு லோகர் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இது குறித்த அதிகாரபூர அறிவிப்பு இன்னும் வெளியாகமால் உள்ளது. கயாடு தற்போது அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார்.